Amma kavithai in tamil – அம்மா என்று சொன்னாலே அனைவருக்கும் பிடிக்கும் இந்த உறவைப் பற்றி முழுமையாக கூறிட யாராலும் முடியாது. இத்தகைய உறவைப் பற்றிய கவிதைகளை இங்கே பார்ப்போம்.
- அம்மா பற்றிய கவிதை
- Mother quotes in tamil
- Amma whatsapp kavithai
- Kavithai for Amma in Tamil
- Mother’s day wishes in tamil
அம்மா கவிதைகள் | Amma kavithai in Tamil

மூன்றெழுத்து கவிதையாய், என் அம்மா, நீ என்னை சுமக்கிறாய், பத்து மாசமாய், எனக்கு பேச்சும் மூச்சும் நீ அளித்தாய் உன் ரத்தத்தால் எனக்கு உயிர் கொடுத்தாய், நித்தம் பாலாக, நான் அழுகும் போது, என் கண் துடைத்தாய், பண்பாய் வளர்த்தாய், என் அன்பாய் இருந்தாய், பாசத்தை ஊட்டி வளர்த்தாய், என்னை கைத்தட்டி ஊக்குவித்தாய், உன் தாலாட்டுக்கு ஏங்கும், சிறு குழந்தையாய் நான் இருக்க, உன் மடியில் உறங்க வேண்டும் என்று, ஒரு வரம் கொடு, என் அம்மா!
அன்பின் முதலும் அன்னை! அன்பின் முடிவும் அன்னை! அன்பின் உருவம் அன்னை! அன்பின் உலகம் அன்னை! போற்றிடுவேன் என்றும் உன்னை!
உலகில் தன்னலமற்ற ஓர் உயிர்… தன் உயிரென எனை பார்த்த ஓர் உயிர்… உயிரை பிரித்து உயிர் தந்த ஓர் உயிர்… மனோஜ் தமிழ் லகம் தனக்கென என்று இல்லாமல் எனக்கென்று இருக்கும் ஓர் உயிர்… என்னுயிர் தந்து எனதுயிரான உன்னை காப்பேன் தாயே..
பனிகுடத்திற்குள் மட்டுமல்ல புவிஉலகத்திற்குள்ளும் தனக்காக இல்லாமல் நமக்காக வாழும் ஒரு உயிர்….I காலை விடியலில் தொடங்கும் அவள் அன்பை ரசித்துப் பார்! அவளின் சமையலை ருசித்துப்பார்! அவளின் புலம்பலை கவனித்துப்பார்! அவளின் கனவுகளை கேட்டுப்பார்! உன்னை சுற்றியே இருக்கும்…! உன் வாழ்க்கையை அவளிடமிருந்து மறைத்துப்பார்… அவளின் வாழ்வு இருள் வானமே… ஆம் அவள் உன்னையே சுற்றும் நிலா! அன்பில் தேய்பிறை இல்லா நிலா…
உயிரை பிரித்து உயிர் தந்த ஓர் உயிர்… தனக்கென என்று இல்லாமல் எனக்கென்று இருக்கும் ஓர் உயிர்… என்னுயிர் தந்து எனதுயிரான உன்னை காப்பேன் தாயே…
என் முகம்பார்க்கும் முன்பேஎன் குரல் கேட்கும் முன்பேஎன் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரு இதயம் என் அம்மா.
ஒவ்வொரு நாளும் கவலைப்படுவாள். ஆனால், ஒரு நாளும் தன்னை பற்றி கவலைப்பட மாட்டாள். அம்மா!
எனக்கு பிடிக்காது என்றுதனக்குப் பிடிக்காத ஒரு உணவை சமைத்து அதனை தானும் உண்டு எனக்கும் தருவார் அதுவே என் அம்மாவின் அன்பு.
வயது வித்தியாசம் பார்ப்பதில்லை., அம்மாவின் கொஞ்சலில் மட்டும் இன்னும் குழந்தையாக..!!
இந்த உலகத்தில் யாரும் தர முடியாத விலை உயர்ந்த பொக்கிஷம் என் அம்மாவின் அளவில்லா அன்பு.
அன்றும் இன்றும் என்றும் நான் விரும்பும் ஓர் அழகிய தோழி என் அம்மா.
சிறுவயதில் என் இரு கைகலை பிடித்து நீ நடக்க வைத்தாய்.. ஆனால் இன்று பல கைகள்.. என்னை தள்ளி விட பார்க்கிறதே அம்மா…. ஏங்குகிறேன் உன்னுடைய அன்பிற்காக…
பசித்தாலே சோறு போடாத இந்த உலகத்தில் பசிக்கும் முன் சோறு போடும் ஒரே உயிர் தாய் மட்டுமே….
கோவில்களுக்கும் செல்லாமல் கையெடுத்து வணங்காமல் நமது ஆசைகளை அனைத்தையும் நிறைவேற்றி தரும் ஒரே தெய்வம் நம் அம்மா!
தாய்மை பேரழகு தான் ஆனால் ஆண்மையில் காண்பது இன்னும் பேரழகு ஆனால் அதை காண்பதுதான் அரிது.
நான் இருப்பது அடுத்தவரிடமோ இல்லை அன்னையிடுமோ என்பதை குழந்தைகள் தன் தாயின் இதயத் துடிப்பை வைத்து கண்டுபிடித்து விடும்.
கோடிக்கணக்கான உறவுகள் தன் அருகில் இருந்தாலும் அம்மா அருகில் இருப்பது போல் எந்த உறவும் வராது.
வானத்தில் தோன்றும் சூரியனுக்கு கூட ஓய்வுண்டு! ஆனால், நமக்காக இருக்கும் அம்மாவுக்கு ஓய்வு என்பதே இல்லை! எனவே அம்மாவை வணங்காவிட்டாலும் மதியுங்கள்!
இந்த உலகில் அனைத்து குற்றங்களையும் மன்னிக்கும் ஒரே நீதிமன்றம் நம் அம்மா மட்டுமே!
எல்லோர் வாழ்விலும் அம்மாவுக்கு என்று நிச்சயம் ஒரு தனி இடம் உண்டு, ஏனென்றால் தனக்கு என்று அவள் வாழாமல் போனதால்!”
எல்லாவற்றையும் மிஞ்சிய இயற்கை கூட சில சீற்றங்களை கொண்டிருக்கும்…ஆனால் எல்லாமுமாக இருக்கும் என் தாயிடம் எதையும் கண்டதில்லை, அன்பை தவிர..
ஒவ்வொரு நாளும் கவலைபடுவாள் ஆனால் ஒரு நாளும் தன்னை பற்றி கவலை படமாட்டாள் உலகிலேயே சிறந்த தெய்வம் தாய் மட்டுமே.. உலகிலேயே மிகச் சிறந்தவர்கள் தாயை நேசிப்பவர்கள் மட்டுமே.
அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அன்னையின் அன்பு…!
இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் முதல் ஆசிரியர் அம்மா தான்.
நான் முதல்முறை பார்த்த அழகிய பெண்ணின் முகம் அம்மா.
என்னை முதன் முதலில் இவன் எப்படி இருப்பான் என்று மதிப்பிடாமல் நேசித்த முதல் உறவு அம்மா!
நான் ஒரு பெண்ணை காதலிப்பதற்கு முன்பே என்னை ஒரு பெண் காதலித்தாள், அது என் அம்மா!
கடவுளே, வா கோயிலுக்கு சென்று கடவுளை கும்பிடலாம் என அழைத்துச் சென்றதுண்டா – அம்மா!
இயற்கைக்கு அழகு நிலா! அது போல் தான் ஒவ்வொரு வீட்டிற்கும் அழகு அம்மா!
வலி நிறைந்தது என்பதற்காக யாரும் விட்டுவிடுவதில்லை தாய்மை!