Appa Kavithai in Tamil – இந்த கட்டுரையில் அனைவரது வாழ்க்கையின் முதல் ஹீரோவான அப்பா பற்றிய கவிதைகளை இங்கே பார்ப்போம்.
- Appa Quotes in Tamil
- அப்பா பற்றிய கவிதை வரிகள்
- அப்பா மகன் கவிதை
- அப்பா மகள் கவிதை
- Father Kavithai in Tamil
அப்பா கவிதைகள் | Appa Kavithai in Tamil
பலரது வாழ்வில் கடைசி வரை விளங்கிக்கொள்ள முடியாத புத்தகம் அப்பா..!
நான் ரசித்த அழகிய இசை என் அப்பாவின் இதயத்துடிப்பு.
அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது.
அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.
அப்பா எனைக் கொண்டே இல்லாமல், என் கனவுகளையும் தன் தோளில் சுமந்து செல்லும் என் வாழ்வின் நிஜ ஹீரோ.
நாம் உயரத்தை அடைய தன்னை ஏணியாக்கி கொள்பவர் தந்தை.
அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் மகளுக்கு அப்பா அடிமையென்று.
நம் வாழ்க்கையை விருச்சமாக்க தன்னை வேராக்கி கொண்டவர் தந்தை.
உலகிலேயே அதிக பாதுகாப்புமிக்க இடம் தந்தையின் கை.
தாயின் கருவறைபோலவே, நாம் விழும்போது தாங்கிக்கொள்ளும் அப்பாவின் தோள்களும் புனிதமானவை.
அம்மாவின் அரவணைப்பு மற்றும் அப்பாவின் ஆதரவுடன் இருக்கும்போது, நாம் ஒருபோதும் விழுவதில்லை.
பிள்ளைகள் வேண்டியதை வழங்கும் ஆனந்தமே அப்பாவின் மனதிற்கு சந்தோஷம் தருகிறது.
குழந்தையாக இருந்த போது உன் கைகளில் பாதுகாப்பாக வாழ்ந்த அந்த தினங்கள் மீண்டும் வராதது என் மனதை வலிக்கச் செய்கிறது, அப்பா.
தன் தலைமீது நம்மை அமர்த்தி உலகத்தை அழகாக பார்க்கச் செய்த அப்பாவை, நாங்கள் ஒருபோதும் தலைகுனிய விடக் கூடாது.
நம்மை தூக்கி அணைக்க முடியாமல் நீ தவித்த போது, உன் கண்களின் வலியும் பாசமும் என் இதயத்தை உருக்குகின்றன, அப்பா.
தன் மூச்சு உள்ளவரை நமக்காக உயிர் வாழும் ஒரே உறவு “அப்பா” தான்.
அப்பா நமக்காக செய்த அனைத்தையும் உணர்வதற்கு, வாழ்க்கையின் ஒரு பகுதியை நாமே கடக்க வேண்டி இருக்கிறது.
அன்பை வார்த்தைகளால் சொல்வதற்குப் பதிலாக, உழைப்பின் மூலம் காட்டும் ஒரே உறவு “அப்பா” தான்.
தாய் நமக்காக கஷ்டப்படுவதை நாம் எளிதாக கவனிக்கலாம், ஆனால் தந்தை எடுத்த உழைப்பை உணர்வதற்கு மற்றவர்களிடம் கேட்க வேண்டிய நேரம் வருகிறது.
உண்மையாக உழைத்து நிற்கும் போது தான், அப்பாவின் தோளில் நாம் சுமத்திய பாரத்தை அவர் எவ்வளவு வலியுடன் கடந்திருப்பார் என்பதை உணரலாம்.
அப்பாவின் அன்புக்கு ஈடான அன்பு இந்த உலகில் எதுவும் இல்லை.
கண்ணுக்கு தெரியாத கடவுளைப் போல், கண்ணுக்கு தெரிந்தும் புரிந்து கொள்ளாத ஒரே கடவுள் “அப்பா”.
செதுக்கப்பட்ட சிலைகள் கடவுள் எனில், எனக்கு அப்பாவும் கடவுளே. அடித்தாலும், அன்பால் அணைக்கும் கடவுள் “அப்பா”.
சில நேரங்களில், பல வலிகளை மறக்க அப்பாவின் சொற்கள் மட்டுமே போதுமானவை.
நாம் தவறான பாதையில் சென்றால் தடுக்க முதலில் ஓடிவரும் உறவு “அப்பா” தான்.
அப்பாவும் அவரது பாசமும்
அப்பாவுக்கு அன்பை வெளிப்படுத்தத் தெரியாது என நினைத்தேன், ஆனால் அவர் தாத்தாவான பின்பே அவரின் பாசம் வெளிப்படுவதை கண்டேன்.
நான் எழுதும் கவிதைகளில் மிக சிறந்த மூன்று எழுத்து – அப்பா
என்னை மட்டுமல்ல, என் கனவுகளையும் சுமந்து நடக்கிறார் என் அப்பா.
தாய் பத்து திங்கள் தாங்கிய வேதனையை, தந்தை ஆயுள் முழுவதும் தாங்கிக்கொள்கிறார்.
தந்தையின் கோபம், மகளின் சிறு கண்ணீர் துளியில் அழிந்துவிடும்.
தாய் உன்னை எதிர்பார்த்து பெற்றெடுப்பாள், ஆனால் உன் எதிர்காலத்தை உருவாக்கி கொடுப்பார் தந்தை.
தாய்க்கு பின் தாரம் இருக்கலாம், ஆனால் தந்தைக்கு பின் தந்தை மட்டுமே.
விளையாட பொம்மை வாங்கித் தரும் அப்பாவை விட, தானே பொம்மையாக மாறும் அப்பாவை பிள்ளைகள் அதிகமாக நேசிக்கிறார்கள்.
கண்ணில் கோபம் இருக்கலாம், ஆனால் இதயத்தில் பாசம் நிரம்பி இருக்கும் ஒர் உறவு – அப்பா.
தந்தையின் செய்திகளை நாம் வாழ்க்கையின் கடைசி வரை முழுமையாக உணர முடியாது.
என்னுடைய வாழ்க்கையை எளிதாக கற்றுக் கொடுத்த முதல் ஆசான் என் அப்பா!
அன்பின் அடையாளமே… அழத் தெரியாத ஆருயிரே… புன்முறுவலிடம் பூங்காற்றே… கரம் பிடித்த கடவுளே… என் முதல்வனே…. வர்ணிக்க இயலா என் வாழ்வின் வர்ணனே… விழி நீர் மண்ணில் விழாமல் வலிகளை புதைக்கும் உழவனே… பூ மனதில் புதைந்த அழியாச் சின்னமே.. அன்றும், இன்றும், சுற்றும், முற்றும் தேடுகிறேன்… நான் தொலைத்த பொக்கிஷத்தை… அப்பா!!!…..
அளவில்லா அன்பை நெஞ்சினில் புதைத்து, இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொடுத்தவன், கள்ள கபடமன்ற கம்பீரமான குரல் நாயகன், உழைப்பால் தேய்ந்துதாலும் பிள்ளையின் குரலில் புத்துணர்ச்சிபெறும் அன்புள்ள அப்பன் இவன்.
காலம் முழுதும் அன்பை மறைத்து காவலனாய் நின்று பாதுகாத்த உங்கள் அன்பிற்கு என்றும் தீரா கடனாளி நான்.
பறந்து போனது 13 வருடங்கள்…. மாறிப்போனது எங்களின் கனவுகள்… சிதைந்து போன சின்னங்களாய் எங்கள் சிரிப்பு போனது… வலிகள் மாறினது எங்கள் வாழ்வும் மாறினது… தவறி விழும்போதெல்லாம் தாங்க வரும் கைகளை கண் தேடியது…. தேடிக் கடுத்த கண்கள் விழி நீரை வீசி எரிந்தது… வலியும் விழியுமாய் எழுந்து… திக்கு திசையின்றி, தட்டு தடுமாறி… காட்டாற்று வெள்ளத்தில் சீக்கிய சிறு குச்சியாய்… வலியை தாங்கும் யுகத்தையும்,நல் வாழ்வின் வழியையும்… தெரிந்துகொள்ள… தேடலில் தொலைகிறது நீ இல்லா எங்கள் வாழ்வு… அப்பா!!!
கருவறையில் என்னை நீ சுமக்கவில்லை ஆனால் நீ கல்லறை போகும் வரை என்னை உன் இதயத்தில் எப்போதும் சுமந்தே இருப்பாய்…
தனக்கு கிடைத்தது பெரியதாக இருந்தாலும் சிறியது என எண்ணுபவர், அதே தன் பிள்ளைகளுக்கு பெரிதாக செய்தாலும் அது சிறியது என்று எண்ணுபவர் தான் அப்பா!
வளக்கையில் உன் கை பிடிதேன்… அப்பா என் ஆசையை நிறைவேற்றும் உன் உழைப்பிற்கு முன்னாள் என் உழைப்பு என்னவாக இருந்தாலும் அது பயணற்றது… உன் வேர்வையில் வாழ்ந்த நான்… என்றும் என் வழர்ச்சியின் தூண்… எனது அப்பா..
என் அப்பா! ஏழை தான்! ஆனால் ஒரு போதும்! என்னை ஏழையாக!! வளர்த்ததில்லை
அளவில்லா அன்பை நெஞ்சினில் புதைத்து, இந்த உலகத்தில் வாழ கற்றுக்கொடுத்தவன், கள்ள கபடமன்ற கம்பீரமான குரல் நாயகன், உழைப்பால் தேய்ந்துதாலும் பிள்ளையின் குரலில் புத்துணர்ச்சிபெறும் அன்புள்ள அப்பன் இவன்.
தன் மகளுக்கு ஒரு துளி கஷ்டம் கூட வராமல் வளர்ப்பவர் அப்பா ஆனால் அந்த கஷ்டங்கள் வரும் பொழுதும் தோலுடன் தோலாய் நிற்பவர் சிறந்த அப்பா!
அன்பின் ஊற்று நீ… ஆனந்தத்தின் பேச்சு நீ… இணையில்லா இன்பம் நீ… ஈடில்லா தொண்டனும் நீ.. உச்ச தோழனும் நீ… ஊன்றுகோலும் நீ.. எல்லாம் எனக்கு நீ… ஏணிபடியும் நீ… ஐயம் அகற்றுபவனும் நீ… ஒளிக்கும் ஒளியும் நீ… ஓவியம் நீ… ஔஷதம் நீ… உயிரும் மெய்யுமாய் என் உயிரில் ஓடும் உன்னதமே… அப்பா!
குடும்பத்தையே தாங்கி பிடித்த தந்தைக்கு கடைசியில் தாங்கி பிடிக்க துணையாக வந்தது அவர் வளர்த்த மரக்கிளை
கைத்தடியாக!
வறுமையின் சுவடு தெரிவதில்லை
அப்பாவின் உழைப்பால்.
உறவுகளுக்கிடையே..உணர்வுகள் ஊனம் என்பதை உணர்த்தியது நீதான்… உன்னால் தான் உணர்வுகள் ஏதுமற்றவளாய் நான்… இன்று உன் உறவுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்… காலம் தாழ்த்தியதும் என் கடமை மறந்ததும் உண்மைதான்……மதியிழந்த பேதையாய் வாழ்ந்துவிட்டேனா… மதியிருந்தும் பிழையாய் நினைத்து விட்டேனா உன்னை….. எதுவாக இருந்தாலும் மன்னித்துவிடு…. என்னை மறுத்துவிடாதே…. அப்பா
எனது எதிர்காலத்தை முன்கூட்டியே தீர்மானித்த விஞ்ஞானி.
தன் பிள்ளைகளை மேலே தூக்க, தான் கீழே குனியும் உறவு – அப்பா.
பலருக்கு, கடைசி வரை புரியாத புதிர் அவரது தந்தையின் வாழ்க்கை.
மகளின் கண்ணீர் மட்டும் தந்தையின் கோபத்தை அடக்கி விடும்.
தாய்க்கு பின் தாரம் இருக்கலாம், ஆனால் தந்தையின் இடத்தை நிரப்ப முடியாது. அவருக்கு நிகர் அவர் தான்.
ஆயிரம் புன்னகைகள் பூத்தாலும், தந்தையுடன் பகிரும் ஒரு சிறு புன்னகைக்கு ஈடு இல்லை.
தன் பிள்ளைகளின் வாழ்வை அமைத்துத் தர, அவரின் வாழ்நாளையே போராடும் உறவு – அப்பா.
சுயநல உலகத்தில், சுயநலமற்ற ஒரு உறவு – அப்பா.
அப்பாக்களை இழந்தவர்களுக்கு மட்டுமே உலகம் பாதுகாப்பற்றது எனும் உண்மை தெரியும்.
அம்மாவின் பிரசவ தழும்புகளுக்கு இணையானவை அப்பாவின் உழைப்பால் ஆன காயங்கள்.
மகளின் கண்ணீரை காண சகிக்காத அப்பாவும், அவரின் அழுகையை நிறுத்த சிரிக்க முயல்கின்ற மகள்களும் இந்த உலகின் அழகான காதலின் வடிவங்கள்.
நம்மை எந்த சூழ்நிலையிலும், யாரிடமும், எதற்காகவும் விட்டு கொடுக்காத ஒரே உறவு அப்பா மட்டுமே.
இந்த கவிதை வரிகள் அப்பாவின் மீது கொண்ட பாசத்தை உணர்த்தும்.
உன்னை எப்போதும் தவறாமல் நினைத்துக் கொண்டிருப்பேன், அப்பா.
Read also: |
---|
அம்மா கவிதைகள் | Amma kavithai in Tamil |