இயற்கையே அழகுதான் ஆனால் அந்த இயற்கைக்கு மேலும் அழகு கூட்டும் விதமாக இயற்கையின் பரிசாய் திகழும் நிலாவை பற்றி இந்த பதிவில் கவிதைகளை காண்போம்.
- Nila quotes in tamil
- நிலா கவிதை 6 வரிகள்
- இரவு நிலா
- Nilavu kavithai in tamil
- பௌர்ணமி நிலா
நிலா பற்றிய கவிதை | Nila Kavithai in Tamil
நிலவை அழகாக்க காட்ட இருளை பூசிக்கொண்டதோ இரவு…
எட்டாத உயரத்தில் இருப்பதால்தான் என்னவோ எப்பொழுதும் ரசிக்கப்படுகிறது…! (நிலா)
என்ன செய்வது இத்தகைய அழகு இருந்தும் மறு திருமணம் நடக்கவில்லை வெள்ளை உடையில் நிலா…!
சொர்க்கத்தை நேரில் காணாத எனக்கு இரவே சொர்க்கமானது, உன் வருகையால்.
ரசனை என்ற ஒன்றை என்னுள் நானே கண்டேன்! உன்னை பார்த்த அன்று!
தூய்மையான உன் வெண்மை என்னையும் தூய்மைப்படுத்த கண்டேன்… அனைத்தையும் மறந்து உன்னை பார்த்த அந்த நொடியில்!
உலகின் உச்சம் அவள், ஆகாயத்தின் வெள்ளை மச்சம் அவள், இரவின் காதலி அவள், ஈர காற்றின் பேரொளி அவள், உலா வரும் ரதி அவள், ஊரையே மயக்கும் மதி அவள், எட்டாத கனி அவள், ஏகாந்த முனி அவள், ஓசை எழுப்பாத மொழி அவள், இரவு என்னும் தனிமையின் வழி அவள்.
வெண்மை நிறந்தவள் வேற்று கிரகத் தவள் மயக்கும் மோகினி அவள் – இருளில்! மறையும் பனித்துளியும் அவளே – பகலில்!
முழு முகத்தையும் மூடிக்கொண்டால் தன் வெட்கத்தால்! உணர்ந்தேன் உலகம் இருண்டதை… படிபடியாய் தன் பளிங்கு முகம் காட்டி நின்றாள் வியந்தேன் உலகம் ஒளிமயமானதை…
ஆகாயக்கடலில் நட்சத்திர மீன்களுக்கு மத்தியில் மிதக்கும் வெள்ளி ஓடம் பிறை நிலா!
மேகமே அவள் ஆடையாய்… விண்மீன்கள் அதில் அலங்காரமாய் … இத்தனைக்கும் சொந்தக்காரி யார்? என்றேன் சோறு ஊட்டி காட்டினால் அன்னை அதுதான் “நிலவு” என்று…
உன் வெட்கத்தை மறைத்து கன்னத்து சிவப்பை ஒழித்து கொள்கிறாய் நானோ அந்திவானத்து நிறத்தை கடன் வாங்கி நினைத்து கொள்கிறேன்.
பகலில் உறங்கி விட்டு இரவில் உலா வரும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் வெள்ளை தேவதை… வெள்ளி நிலா!
வெண்பாவை அவன் விண்வெளியின் தேவதை அவள் கலங்கமற்றவள் அவள்.
பௌர்ணமி அன்று பகலானாய் நானும் நிலவும் வெகு தூரம் நீளும் தூரம் உன் ஒளியிலே நான் நிழலானேன் உன்னால் இரவுக்கு விடுமுறை விடியலுக்கு விடிவெள்ளி விழுந்து எழுந்தேன் உன்னை காணவில்லை காத்திருப்பேன் உன்னை காண.
வான் மேகங்கள் விளையாடும் வான் நிலவோடு எத்தனை கறை பட்டாலும் உன்னை மழைநீர் கழுவிச்செல்லு! உலக அழகு உன்னிடம் மட்டுமே இரவு மட்டும் தான் உன் வாழ்வு… உயிர் இருக்கும் வரை என் வாழ்வு…
என்னைப் பார்த்த பொன்னிற – நிலா! என் பாதையில் நடந்துவரும் – நிலா! என் தூக்கத்தை எடுத்துக் கொண்டறியா தினம் மனதில் உலாவரும் -நிலா! என் கனவில் உறவாடும் – நீல.. அது என் -நிலா!
கரு நீல வானம் பக்கவாட்டில் சில வெள்ளை மேகம்!! மெல்லிய வெளிச்சம் சிறிது இடைவெளியில் முத்துப்போல் நட்சத்திரம்!! கடற்காற்று ஒலி அமைக்க நட்சத்திர தெருவில் நீ மட்டும் ” திருவிழா வாய் மலர்கிறாயே என் நிலாவே !!!
பால் நிலவை சிந்தித்தால் பிறர் மனங்குளிர பேரன்பில் அமுதமாய் மொழிந்திடுவாய் !