கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas wishes in tamil

ஒவ்வொரு ஆண்டும் இயேசு பிறந்த நாளாய் கொண்டாடும் வகையில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் குழந்தைகளுக்கு பரிசுகள் கொடுத்தும் மற்றும் நம் உறவுகளுக்கு விருந்தோம்பல் செய்து மற்றும் ஆலயத்திற்கு சென்று வழிபடுதல் போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை கிறிஸ்துமஸ் என்று செய்கிறோம்.

எனவே இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு நம் நண்பர்களுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் இந்த பதிவில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை கொடுத்துள்ளோம்.

  • Christmas Tamil Quotes
  • Christmas wishes for family and friends
  • Christmas tamil text
  • கிறிஸ்மஸ் வாழ்த்து கவிதை

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் | Christmas wishes in tamil

இம்மானுடத்தின் பாவத்தை போக்க மானிடனாய் வந்தார்! சிலுவையை சகிக்க அறிந்தே அவதரித்தார். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

கொண்டாடுவோம் இந்த கிருஸ்துமஸை அவர் நமக்காய் மீண்டும் வருவார். இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

மன்னிப்பை மக்களுக்கு அருளிய மகா கடவுள் பிறந்த தினம்! மக்களின் துன்பம் மறைந்த தினம்!

மகிழ்ச்சி நிறைந்த தினம்! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

பொன் வெள்ளி தூபவர்க்கம் கொண்டு பணிந்து போற்றி துதித்திடுங்கள் விண்ணை விட்டு மண்ணில் வந்த விண்ணரசரை இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

மத வெறி சக்திகள், மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்த நினைக்கும் இந்த வேளையில், மத நல்லிணக்கத்தை பேனி காக்க சபதமேற்போம்! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

இறைவனின் அருள் என்றும் நமக்கு கிடைக்கும் என்று நம்புவோம் ஒரு இந்தியனாக இயேசுவின் பிறப்பை கொண்டாடுவோம்.

வெண் புறா போல வெண் பனி பொழிகிறது அது பனி மட்டுமல்ல… உள்ளத்தை நனைக்கும் தேவ மாலை… இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

ஆளுக்கு இப்படி பேசமா இருந்த எப்படி …? இன்னும் கொஞ்சம் நாள் தான் இருக்கு …யாராவது அட்வான்ஸ் வாழ்த்துக்களை சொல்ல ஆரம்பிங்க. நானே ஆரம்பிக்கிறேன் மேரி கிருஸ்துமஸ் ஹேப்பி கிருஸ்துமஸ்.

உலக மக்களின் பாவங்களை தீர்க்க தன்னை அர்ப்பணித்த தேவ தூதராய் இந்த இனிய கிருஸ்துமஸ்.

திருநாளில் போற்றி வணங்குவோம். இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

என் வாழ்த்துக்கள் என்றென்றும் உன்னுடன் இருக்கும், இந்த சிறப்பு நாளில், இதோ எனது சிறப்பு வாழ்த்துக்கள் உனக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்… இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இதயங்கள் இனிக்கட்டும்! இன்பங்கள் பெருகட்டும்! மனங்கள் எல்லாம் மகிழட்டும்! மாபரன் இயேசு வருகையிலே மலர்ந்த மனதுடன் இதயம் நிறைந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

மாட்டுத்தொழுவத்தில் மாணிக்கம் ஒன்று பிறக்கப்போகிறதே! மனித வாழ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்க தெய்வம் தான் நேரில் வருகிறதே! ஏற்றத் தாழ்வினை உடைத்தெறிய மானிடனாய் பிறக்கப்போகிறதே! நம் கிறிஸ்துமஸ் பண்டிகையில்.

பனிப் பொழிவுகுள் ஒரு முத்து ஒன்று பிறந்திட… புது வாழ்வுக்குள் ஒளி தீபம் ஏற்றிட பிறக்கப் போகிறார்… நம் வாகனம் மைந்தன் இயேசு அவர்கள்.

ஏழைகளுக்கு அடைக்கலம் கொடுத்திட… பாவங்களைப் இனி போல போக்கிட… பிறக்கப் போகிறான் நம் ஏழைகளின் மைந்தன் இயேசு அவர்கள்.

அன்பு என்னும் விதையை விதைத்திட அடிமை என்னும் சிறையினை உடைத்திட பிறக்கப் போகிறான் நம் மரியன்னையின் மைந்தன் இயேசு அவர்கள்.

எளிமை என்னும் கோலத்தை போட்டிட ஆடு மேய்க்கும் மனிதனாக காட்டிட உத்தம மனிதனாய் வாழ்ந்து காட்ட வருகிறார் நம் எளிமை மைந்தன் இயேசு அவர்கள்.

வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்திட துரோகத்தின் உண்மையை உடைத்திட பிறக்கப் போகிறான் நம் நீதி மைந்தன் இயேசு அவர்கள்.

கிறிஸ்மஸ் பண்டிகையில் நம்மை வைணவர்களுக்கும் வாழ்த்துச் சொல்லி விட்டு வருவோம்.

ஒற்றுமையின் உன்னதத்தை உணர்த்திட ஒளியாக முளைக்க வருகின்றது இந்நாள்.

அதிகாலை இரவில் உலகம் அசந்து தூங்கும் பொழுதில் மார்கழிப் பனியில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தவரே! வானதூதர் வழிகாட்ட வான் நட்சத்திரங்கள் ஒளியூட்ட இடையர்கள் கண்ணில்பட்ட யூத குலத்தில் பிறந்த தேவமகனே!

பிரார்த்திப்போம் நம் திருநாளில் மற்றவர்களுக்காக. வானுலகும் மானுடமும் கொண்டாடும் பண்டிகை.

இந்த இனிய கிருஸ்துமஸ் நன்னாளில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் இயேசு பிறப்பின் வருகையை எண்ணி, ஆடி பாடி, கொண்டாடும் இந்த அழகிய கிருஸ்துமஸ் பெருநாளில், எல்லா வளங்களும் நலங்களும் பெற்று, வாழ்வில் வளர, எனது உளமார்ந்த இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

சோர்ந்து போன மனிதனுக்கு சுகமான இறைப்பற்றை தந்திட! வாழ்வைத் தேடும் மனிதனுக்கு வளமாய் வாழ்வை வழங்கி, கிறிஸ்து பிறந்த இந்நாளிலும் தொடர்ந்து வரும் புத்தாண்டில் ஒவ்வொரு நாளும் நிறைவாக பெற்று மகிழ்ந்திட எம்பெருமான் இயேசுவை வேண்டிக் கொள்வோம்! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

கிறிஸ்து அவதரித்த நன்னாளைக் கொண்டாடும் அத்தனை தோழிகளுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சியும் வளங்களும் பெருகட்டும்.

மண்ணில் வந்த விண்ணின் வேந்தனை போற்றி பாடி கொண்டாடுவோம் ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் இந்த நன்நாளில்.

வின்மதியே ஒன்மதியே ஒப்பிலாத வான்மதியே பாரில் என்னை மீட்க வந்த பராபரணை பண்பாடி துதிப்போம் கொண்டாடி மகிழ்வோம்.

மாட்டுத்தொழுவத்தில் பிறந்து மரியனனையின் மடியில் தவழ்ந்த மகான் அன்பின் மகத்துவத்தை அன்பினால் உணர்த்த விண்ணிலிருந்து பிறந்த வீரத்திருமகன்.

மக்களுள் மக்களாய் மனிதருள் மாணிக்கமாய் எக்காலமும் பேர்போற்ற ஏசுவாய் பிறந்த மேசியா இவன் ஆதவன் உதிப்பது அகிலம் சிறக்கத்தான் பிதாமகன் பிறந்தது.

நாம் எல்ல பாவங்களுக்கும் பரிகாரமாய் இயேசு தான் உயிர் திறந்தார் இந்த கிறிஸ்மஸ் முதல் நல்வழியில் நடப்போம்.

இருளை நீக்கி ஒளியை அருள!புத்தாண்டில் புத்தொளி தருக!கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

இந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உங்களுடைய துன்பங்கள் விலகி என்னற்ற இன்பம் கிடைக்க வாழ்த்துக்கள்.

இன்பம் பொங்க மகிழ்ச்சி நிறைய அனைவர்க்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

உங்கள் அனைத்து எண்ணங்களும் நிறைவேற என்னுடைய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பார்! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

மாந்தர்கள் காண வாசம் செய்த மகிமை தேவனை மண்ணில் கண்டோமே! மகிழ்வோம் கிறிஸ்து பிறந்த இந்நாளிலே! இனிய கிருஸ்துமஸ் நல் வாழ்த்துக்கள்.

சர்ப்பம் தந்த பாவத்தை கர்ப்பம் வந்து தீர்த்த நாள்! மரத்தால் விளைந்த பாவத்தை வரத்தால் களைந்த மந்திர நாள்! வார்த்தை ஒன்று மனிதனாய் வடிவெடுத்த நல்ல நாள்! இனிய கிருஸ்துமஸ்நல் வாழ்த்துக்கள்.

Leave a Comment