தன்னம்பிக்கை வரிகள் | Motivational Quotes in Tamil

எதை வேணாலும் சாதித்து விடலாம் என்ற உணர்வு தான் தன்னம்பிக்கை. மற்றும் தோல்விகளில் இருந்து மீண்டும் எழும் உத்வேகத்தையும் தரும். எனவே இந்த தொகுப்பில் இத்தகைய வரிகளை பலவற்றை கொடுத்துள்ளோம்.

எனவே வாழ்க்கையில் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கையை இந்த தன்னம்பிக்கை வரிகள், மேற்கோள்கள், கவிதைகள் உங்களுக்கு தரும்.

  • தன்னம்பிக்கை கவிதைகள்
  • Inspirational tamil quotes
  • success motivational quotes in tamil
  • Motivation Kavithai in Tamil
  • Motivation Quotes in Tamil

தன்னம்பிக்கை வரிகள் | Motivational Quotes in Tamil

Motivational Quotes in Tamil images

எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால், தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்..!!

ஒருவனுடைய வெற்றிக்கு முன்னால் வேண்டுமானால் பரிசும் பாராட்டும் இருக்கலாம் ஆனால் அவனுக்கு பின்னால் நாங்கள் தான் இருக்கிறோம் அவமானம் நிராகரிப்பு தோல்வி.

மாற்றி யோசனை செய்யாமல் மாற்றங்கள் வருவதில்லை.

முடியாது என்பது.!! முற்றுப்புள்ளி.!! முடியும் என்பது.!! வெற்றிப்புள்ளி

புத்திசாலியா முட்டாளா என்னடி வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்.

வாழ்வின் பாடத்தை கற்றுக் கொள்ள பெற்றோர்கள் கடந்து வந்த பாதையை அறிந்து கொண்டாலே போதும்.

நிறைய காயங்களுக்கு பிறகுதான் கனவுகளெல்லாம் நனவாகும்.

இருளாக வாழ்க்கை என்றுமே இருந்து விடுமோ என்று கவலை கொள்ளாதே கனவுகள் முளைப்பது இருளில் தான்.

தோல்வியாளர்கள் சாக்கு போக்குகள் சொல்கின்றனர் வெற்றியாளர்கள் பணம் உழைக்கின்றனர்.

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால். எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும். உன் விடா முயற்சியால்.

வாழ்க்கையில் தவறுகளை செய்ய பயப்படாதீர்கள் ஏனெனில் தவறுகளிலிருந்து தான் கற்றுக் கொள்ள முடியும்.

எந்த இடத்தில் இருக்கின்றோம் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்பது முக்கியமில்லை எங்கு இருந்தாலும் சந்தோஷமாக இருக்கின்றோமா என்பது தான் முக்கியம்.

அகப்பட்ட துளியே மழையாகும்! அடைபட்ட விதையே மரமாகும்! உழப்பட்ட நிலமே பயிராகும்! உடைபட்ட மனமே திடமாகும்!

துயரங்கள் துரத்தும் துவண்டு விடாமலும்! கவலைகள் நெரிக்கும் கலங்கி விடாமலும்!தோல்விகளை வேள்விகளாக்கி….. தடைகளை உடை தடம்பதி சிகரம் தொடு லட்சியம் கொள் நிச்சயம் வெற்றி!

பாதை இல்லாத போதும் உன் பாதங்களை பதிய வை…! புதிய பாதை ஆகட்டும்…

நாம் உயரும் போது சில விமர்சனங்கள் வரும்..! அதை பொருட்படுத்தாமல் இருந்தால் வெற்றியும் புகழும் நமக்கே சொந்தம்..! துவண்டு போவேனே தவிர தோற்று போகமாட்டேன்..!

முதலில் உன்னை நேசி! உன் உடல் உள்ளமும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்… முடிந்த அளவுக்கு இயற்கையச் சார்ந்து இரு…

காலம் கடந்து சென்றாலும், மனம் உடைந்து நின்றாலும், கனா கரைந்து விட்டாலும், உறவுகள் உதறிச் சென்றாலும், நீ உனக்காக இருக்க‌வேண்டும் உன் இலட்சியக்கனவை துரத்தி அடைய‌ வேண்டும்!!!

வலி என்று ஒதுக்கி விடாதே அதுதான் உன்னை வலிமையாக்கும்.. தோல்வியை கண்டு துவண்டு விடாதே அதுவே உன்னை வெற்றியாளனாக்கும்..

வெற்றி அவ்வளவு தூரத்திலும் இல்லை தோல்வி அவ்வளவு பக்கத்திலும் இல்லை போராடுங்கள்.

தேடுங்கள் நிச்சயம் ஏதாவது கிடைக்கும்… சில சமயங்களில் தேடியது பல சமயங்களில் தேடாதது…

அழுகை… தோல்வியைக் கண்டு துவண்டு போய் அழுவதை நிறுத்து உன் அழுகையினால் எதுவும் மாறப் போவதில்லை நீ சிந்திய கண்ணீர் துளிகள் காய்வதற்குள் புறப்படு, தோல்வியை ஏறும் ஏணியாக மாற்றிக் கொள், தோல்வியே வெற்றிக்கான முதல் படி அல்லவா!!! அழுவதை நிறுத்து முதலில்…

சிறகாகவோ இறகாகவோ இருப்பதென்பது அவ்வளவு எளிதல்ல பார்பதற்கு மென்மையாக தெரிந்தாலும் பறப்பதற்கான வலிமையும் வலியையும் அவையே தாங்குகிறது.

வாய்ப்பு என்பது ஆகாய விமானம் மாதிரி , அனுமதி சீட்டை பயன்படுத்தியவரே ஆகாயத்தில் பறக்க முடியும் அதிர்ஷ்டம் என எண்ணியவர்களால் ஆகாயத்தை மட்டுமே வாடிக்கையாய் வேடிக்கை காணலாம்!

எடுத்த’ முயற்சியில் தோல்வியடைந்தால் ‘அடுத்த’ முயற்சியை வெற்றி பெற செய் அதுவே வீரனுக்கு அழகு…

தெரியாத விஷயங்களை பேசாதீர்கள்! புரியாததை புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள்! தற்பெருமையை தானாக ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! எதிலும் முந்திக்கொண்டு செல்லாதீர்கள்!தெரியாததை கேட்க தயங்காதீர்கள்!

உலகின் சாதனையாளர்கள் பலரை நீ சந்தித்து இருப்பாய், அந்த வரிசையில் என்னையும் நீ சந்தித்தமையால் உனக்கு நன்றி சொல்கிறேன் – அன்புள்ள அவமானமே…!

சங்கடங்கள் வரும் போது தடுமாறாதே..!! சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.!!

உனக்குள் இருக்கும் உன்னைஅறிந்தால், உலகை வெல்லும் வலிமை கிடைக்கும்!

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள் வலிகளும் பழகிப்போகும்…

முயன்று பார்ப்பதில் பிழை ஏதும் இல்லையே நண்பா! வா… மீண்டும் ஒருமுறை மட்டும்!

தடைகள் பல வந்தாலும்… தாவி சென்று ஓடு….. சோதனை காலத்தை தூக்கி போட்டு விட்டு…. சாதனை காலத்தை நோக்கி அடி எடுத்து வை…..

உயிர் போகும் தருணத்திலும்….
சாதனை என்ற ஒன்று இல்லாமல் ஒரு அடி எடுத்து வைக்க முன் வராதே…

நீ.. யார் ? என்று இவ்வுலகிற்கு காட்டும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை… கூடிய விரைவில் உள்ளது….

என்னை புரிந்து கொண்டமையால் நீ என்னை அவமானப்படுத்தினாய், என்னை அவமானப்படுத்தியதனால் நான் என்னை புரிந்து கொண்டேன். என்னை எனக்கு புரியவைத்தமையால் உனக்கு நன்றி சொல்கிறேன் ! அன்புள்ள அவமானமே…!

எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும். ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு…!

வறுமையை கடந்து பார் செல்வம் வரும்.. அழுகையை கடந்து பார் தைரியம் வரும்.. தோல்வியை கடந்து பார் வெற்றி வரும்.. அதன் பின்னே சென்று பார் மகிழ்ச்சி வரும்.. அது நிச்சயம் உன்னை தொடர்ந்து வரும்..

உங்களுக்குள் முதலீடு செய்யுங்கள் அதுவே சிறந்த வட்டியை பெற்றுக் கொடுக்கும்.

சிங்கம் சீரும் நாட்கள் காத்துக்கொண்டு இருக்கிறது… அமைதியாக இல்லை .. கர்ஜனயுடன் தீட்டி கொண்டிருக்கிறது…

உங்கள் வாழ்க்கையானது உங்கள் எண்ணப்படியே நிகழும் அதனால் எண்ணத்தை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருங்கள்.

தோல்வியாளர் இலக்கை அடையும் முன்னே விட்டு விடுவான் ஆனால் ஒரு வெற்றியாளர் வெற்றி காணும் வரையில் தோற்று கொண்டே இருப்பான்.

கனவுகள் தான் நாம் வெற்றிக்கான எரிபொருள் எனவே வெற்றியை நோக்கி ஓடாமல் கனவை நோக்கி ஓடு தானாகவே வெற்றி கிடைக்கும்.

உறுதியான தேடல் இருந்தால் தேனும் தேடாமல் கிடைக்கும்.. உழைப்பும் உறுதியும் இருந்தால் உயர்வும் உண்மையாக கிடைக்கும்.. விடா முயற்யை விடாமல் இருந்தால் விட்டதும் உனக்கே கிடைக்கும்.. தன்னம்பிக்கையும் முயற்சியும் இணைந்தால் தோல்வியும் உன்னிடம் தோற்கும்.. வெற்றி உனக்கே கிடைக்கும்..

காலம் இலையுதிர் காலம் இனி வரும் காலம் வருங்காலம்! காலில் விழுந்தால் கடவுள் கருணை நம் வரமாகும்! காலில்லாமல் வீழ்ந்தால் கடவுள் மூச்சு நம் பேச்சாகும் !

உண்மையான வெற்றி பல சவால்கள் மற்றும் தடைகளை தாண்டி தான் வரும்.

உன்னுடைய லட்சியத்தின் வெற்றி பாதையில் செல்லும் வழியில் பல தடைகள் வரலாம், அந்த தடைகள் வென்றால் தான் வெற்றி.

நீ கட்ட வேண்டியது உன் வெற்றிக்கான பாலம் தான் உன் வெற்றியை தடுக்கும் சுவர் அல்ல.

டிஸ்னரியிலும் சாக்ரிஃபைஸ் என்ற வார்த்தை சக்சஸ் என்ற வார்த்தைக்கு முன்னால் தான் வருகிறது! எனவே வெற்றிக்கான வாழ்க்கையில் சிலவற்றை இழப்பது தவறல்ல.

ஒரு தலைவன் தனக்கென கூட்டத்தை சேர்க்க மாட்டான் அவன் பல தலைவர்களை உருவாக்குவான்.

பலரால் சாத்தியப்படாதது சிலரால் சாத்தியப்படுகிறதே எப்படி….? தன்னம்பிக்கையும் தைரியமும் சாதிக்க துடிக்கும் வெறியும் தக்கவைப்பவர்களால் தான் சாதனைகளை பிறப்பிக்க முடியும்….!

நீ கனவு காண்பது உனக்கு கிடைத்தே தீரும்! அந்தக் கனவு என்னவாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்!

தோல்வியை கண்டு தளர்ந்து போனவர்கள் அங்கேயே முடங்கி போகிறார்கள்! தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டவர்கள் முன்னோக்கி போகிறார்கள்!

எதிலும்…. தோல்வியை நேசித்தால் வெற்றியை சுவைக்கலாம்…

தோல்வியை ஒரு முறை எதிர்த்து பார்!!!
உன்னை தோற்கடிக்க யாரும் இல்லை என்ற தைரியம் வரும்!!!

உன் வெற்றிக்கான முதல் படியே தோல்வி தான் எனவே அதை கண்டு பயந்து ஓடாதே!

சரியாக செய்ய வேண்டும் என தள்ளி போடுவதை விட தவறுகளை திருத்தி நேற்று இருந்ததை விட சிறிதளவு முன்னேறுவது எவ்வளவோ மேல்.

கடினமாக இருக்கும் பாதை தான் ஒரு அழகான இடத்திற்கு கூட்டிச் செல்லும் அது உன் வாழ்க்கைக்கும் பொருந்தும்.

தடைகளால் உன் கனவு களைய போவதில்லை, நீ நினைத்தால் தான் உன் கனவு கலையும்.

நாளைக்கான வெற்றிக்கு காரணமாய் அமைவதே நீ நேற்று கண்ட தோல்வி தான்.

திரும்பிடும் திசையெல்லாம் திசை மாறக்கண்டேன்.. போகும் இடமெல்லாம் தோல்வியை கண்டேன்.. இனி எனக்கில்லை தோல்வி என்று நம்பிக்கை கொண்டேன்.. சாதிக்கும் தைரியம் எனையாள கண்டேன்.. கடைசி வரை போராடி வெற்றியும் கொண்டேன்..

உன் கடமை வெற்றி கிடைக்கும் வரை போராடுவது அதன் பின் தக்க வைப்பது உன் திறமை!

எதையும் எதிர்பார்க்காதே! ஆனா எல்லாவற்றைக்கும் தயாராக இரு!

முயற்சிகள் உனக்கு தோல்வியை மட்டுமே தரும் முயற்சியை விட்டு விடும் வரை, முயற்சியை நீ விட்டு விடாதே அந்த முயற்சியும் தோத்துவிடும் உன்னிடத்தில்.

ஒரு புத்திசாலி இடம் இருப்பது திட்டம் தான் ஆனால் ஒரு முட்டாளிடம் இருப்பது வெறும் கதை மட்டும் தான்!

உன்னுடைய இலக்கு உன் வெற்றியே தடைகள் அல்ல.

காதல் என்ற ஒன்று முதலில் வந்தது சாதனையின் மேல்….

ஊக்கமாக முழு ஒத்துழைப்பு முழு ஈடுபாடு கொண்டு முன்னேற்ற பாதைக்கு திரும்ப போகிறது உன்னை போன்ற ஒரு சிங்கம்….

Leave a Comment