தமிழ் காதல் கவிதைகள் | Tamil Love Quotes

Love Quotes in Tamil – அனைவரிடத்திலும் காதல் வந்து எனவே இத்தகைய மிதமான காதலை பற்றி கவிதைகளை இந்த கட்டுரையில் காண்போம்.

காதல் பற்றிய வரிகள் | Love Quotes in Tamil

வித விதமான அழகை பார்த்து மயங்காத நான் உன் விலைமதிப்பு இல்லாத அன்பை பார்த்து மயங்கிவிட்டேன்.

மரணத்தையும் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் என்னுடன் நீ இருந்தால்.

Love quotes in tamil images

கனவிலும் நீ காயப்பட கூடாது என்று நினைப்பது நான் மட்டுமே..

பேசுவதற்கு இன்னும் ஏதோ ஒன்று இருந்துக் கொண்டே தான் இருக்கிறது.. உன்னுடன் பேசும் போது மட்டும்…

என் நிழல் கூட உன்னை தவிர யாரையும் நெருங்காது.

உன் அன்புக்காக ஏங்கும் இதயமும் நான் தான் உன்னை அன்பாய் தாங்கும் இதயமும் நான் தான்.

சொர்கமான நீ என்னுடன் இருந்தால்.. அந்த நரகத்தில் ‘கூட நான் வாழுவேன்… தேவதையே…

உன் பின்னால் அலைவது உன் உடம்பு வேண்டும் என்பதற்கு அல்ல உன் உள்ளத்தில் இடம் வேண்டும் என்பதற்காக தான்.

எத்தனை யுத்தங்களை கடந்து வந்தேன்… உன் ஒரு முத்தத்திற்காக…

என்னவன் ராஜாவாக இல்லை என்றாலும் என்னை ராணியை போல் பார்த்துக்கொள்வான்.

வாழ்வோ சாவோ? இன்பமோ துன்பமோ? எதுவாக இருந்தாலும் உன்னுடன் மட்டுமே.

Love quotes in tamil images

கைப்பேசியில் தொடங்கிய நம் காதல்… இன்று கைகோர்த்து வாழ்கிறோம்.. உயிருள்ளவரை.. கைவிடாமல் இருப்போம்….

ஆயிரம் வலிகள் வந்தாலும் வலிகளை இன்பமாக நெஞ்சில் சுமப்பது தான் காதல்.

அழகிகள் ஆயிரம் ஆயினும் அவர்களுக்கு ராணி நீயே.

என் இதயத்திலிருந்து பிறக்கும் மூச்சுக்காற்றை… எனக்காக மட்டும் சுவாசிக்கவில்லை… உனக்காகவும் சேர்த்து தான்… நேசிப்போம் மூச்சு உள்ளவரை….

பயணத்தின்போது கடக்கும் கோயில்களில், ஒரு நொடி வேண்டுதலும் உனக்காகவே..!!

மறந்துப்போன மகிழ்ச்சியை மறுபடியும் மலர வைத்தாய் நீ…️

என்னுடைய சந்தோஷத்திற்கு காரணம் யார் என்று கேட்டால் தைரியமாக கூறுவேன் நீ தான் என்று.

Love quotes in tamil images

அலைப்பேசியிலும் காதல் அலை வீசுகிறது, நீ அழைக்கும் போதெல்லாம்..!

அழகான கண்களுக்கும், ஆழமான கண்ணீருக்கும் இடைப்பட்டது தான் காதல்.!

தேடுவதெல்லாம் உன் தேகம் தொட அல்ல தேவை உன் அருகாமை மட்டுமே கொஞ்சம் தோள் சாய்ந்து கதை பேச தான்.

அவள் வரையும் ஓவியமாக நான் இருக்க கூடாதா! வண்ணங்களாய் அவள் என்னை தீண்ட!

காதல் கவிதைகள் | Love Kavithai | Kadhal kavithai

உன் தேடலுக்காகவே தொலைந்திட நினைக்கிறேன். நீ தொலைந்திடுவாய் என்பதாலயே தொலையாமலிருக்கிறேன்.

அவளை அன்று காணவில்லை என்றால் நிலா இருந்தும் முழுமை பெறாத அவளின் வானம்..

கொஞ்சம் மழை கொஞ்ச நீ கெஞ்ச நான் இன்னும் நீளும் உரையாடலுக்கு சாட்சியாக இந்த நிலவு.

இரவின் ஒளியில் என்னவளின் முகம் கண்டு மயங்கி சிந்தித்தேன் விண்ணில் ஒளிவீசி கொண்டிருந்த விண்மீன் என் மீது இரக்கம் கொண்டு மண்ணில் ஒளி வீச வந்து விட்டதோ என்று!

நெடுந்தூர கூந்தலும் நெளியும் விழிகளும்.. இவள் அழகில் மயங்கியது நான் மட்டும் அல்ல.. இவளை வர்ணிக்கும் வார்த்தைகளும் தான்.. அவளின் புடவை அழகில் தடுமாறி நிற்கிறது என் கவிதைகள்.. உன் புன்னகையால் கொஞ்சம் தட்டி கொடு கவிதைகள் யாவும் முக்தி பெறட்டும் கவிதையே…. எப்பா என்ன ஒரு அழகு…

கெஞ்சிக் கொண்டே இருக்கிறேன் – ஒரு கொஞ்சலுக்கு; சண்டையிட்டுக் கொண்டே இருக்கிறேன் – ஒரு அணைப்பிற்கு; பேசிக் கொண்டே இருக்கிறேன் – ஒரு முத்தத்திற்கு; அவனை, காதலித்துக் கொண்டே இருக்கிறேன் வரும் யுகங்கள் எல்லாம், ஒரு கரம் பிடிப்பதற்கு!

காதல் சிலருக்கு உண்மை சிலருக்கு பொய் பலருக்கு மாயை…

கொடுத்து கொடுத்து வாங்குவதில் ஏதோ ஒரு பேரானந்தம் இருக்க தான் செய்கிறது அன்பு நிறைந்த காதலில்…

Love quotes in tamil images

சில நேரம் அவள் அகம் பிடித்த கழுதை தான் ஆனால் அன்பு செய்வதில் பேய் அவள்…

பேச தெரிந்தும் ஊமை ஆக்கிவிட்டாய்! உன் முத்தங்களால்!

வாழ்நாள் முழுவதும் நாம் பேச வேண்டும் மொழிகளால் அல்ல முத்தங்களால்.

வேண்டுமா என்று கேட்காமல் கொடுப்பது நீ எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லாமல் இருப்பது நான். எதை?

மெல்ல மெல்லமாக கரைகிறேன் உன் மெல்லிடையை கண்ட நொடி முதல்….

வேண்டாம் என்று இதயம் தயங்கினாலும்.. வேண்டும் என்று கண்கள் ஏங்குகிறது.. உன்னை நான் தொட்டு விட.. என் கவலைகளை மறந்து விட.. இருந்தும் உன் மனதில் ஒரு அச்சம்.. குடுத்து விடு சொச்சம்.. எதுவும் வேண்டாம் மிச்சம்.. என்று..

மந்திரம் கூறாமல் மயக்கி விட்டாய் உன் கண் அசைவில்…

உன்இமைகளால் என்னை இம்சை செய்கிறாய் ?உன் இதழ்களால் எனக்கு இன்பம் தருகிறாய்!

வாய்விட்டு சொல்ல முடியாத காதலை வாயை அடைக்கி சொல்லி விட்டாய் மூத்தத்தால்!

என் மூச்சு நிற்கும் வரை உன்னுடைய மூச்சு முட்ட முத்தம் வேண்டும்..

என்னுடைய சிறிய ஆசை இது தான்.. விடியல் இல்லா இரவும்.. விடாத உன் முத்தமும்.. உன்னுடன்…

என் இமை இரண்டும் போதவில்லை, உன் இடை அழகை ரசிப்பதற்கு.

கவலையும் கரைந்து விடும் கட்டிலில் உன் காமம் கலந்த விளையாட்டினால். தேன் கூட்டில் இருக்கும் தேனை ருசிபதை விட என்னவன் / என்னவள் இதழ் கூட்டில் இருக்கும் அமிர்தத்தை ருசிபதே ஆசை.

உன் இமை அழகை காட்டி மயக்கிய போதும் மயங்காத நான் உன் இடை இடுப்பின் அழகில் மயங்கிவிட்டேன் என்றும் தெளியா போதையில்.

இடியுடன் பொழியும் மழையில் இதழ் என்னும் விறகுகளால் முத்தம் என்ற தீயை மூட்ட வேண்டும் நாம் குளிர் காய.

என் கண்கள் மூட மறுக்கிறது மூடிய உன் ஆடை சிறிதளவு தெரியுமா என்ற ஏக்கத்துடன்.

எதுவும் இல்லாமல் நடக்கும் இந்த இரவு வேட்டையில் எவ்வித கவலையும் காணாமல்.

அணுகுண்டை விட ஆபத்தானது அவள் கண்கள்…

உன் அணைப்பில் வழியும் அந்த காதலை உணர ஒரு யுகம் போதாது அன்பே.

கவிதை ஒன்று எழுத நினைத்தேன் அவளை வர்ணிக்க பின்னர்தான் உணர்ந்தேன் கவிதையே அவள் பெயரில் உருவம் கொண்டது என்று.

கரியவன் போரிட்டு கதிரவனை வென்று இரவென்று இருள் புரிந்து அண்டமும் ஆழ்கடல் மூழ்க, அகலேந்தி அன்னநடை கூட்டி கருவிழி உருட்டி எனைத் தீண்ட, என்னவள் மேலிடை வளைத்து பூவென அள்ளி கரம் சுமந்து இதழ் அவிழ்த்து முத்தம் தரித்திட, மேனி எங்கும் சுவாசம் வருட வெப்பம் இடமாறி மொழிகள் தடுமாறி ரேகை பதிய உடல் அனைத்து, ஈருடல் ஓருயிரென காதல் மலர்ந்ததுவே !!!

களவாணி கவிதைகள் தான்! திருடியதும் நான் திருடப்பட்டதும் அவள் கண்களால் !

கடிதங்கள் வரைந்தேன்! கவிதைகள் புனைந்தேன்! கற்பனையில் கரைந்தேன்! குரல் கேட்டு குழைந்தேன்! இடை கண்டு இழைந்தேன்! முகம் கண்டு மகிழ்ந்தேன்! பிணியோ நோயோ, காதல் என்றே கணித்தேன்…

கவிதை எழுத ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் என்னால் உன்னை மையால்.. எழுத முடியவில்லை.

நான் ரசித்து ரசித்தே பேரழகானாய் நீ! உன் பார்வையால் நானும் பேரழகியே!

உனது காந்த கண்ணில் காலம் முழுவதும்
கரைந்து போக ஆசைப்படுகிறேன்.

நீ வா(சுவா)சிக்க மட்டுமே மலர்ந்தது இந்த சிவப்பு ரோஜா.

நீ அழகு என்று சொல்லி கணநேரத்தை வேண்டுமென்றால் கடத்தி விடலாம் !
ஆனால் காலமெல்லாம் கடக்க வேண்டுமென்றால் அவள் பேரழகியாகவே
இருந்தாலும் அது பேரன்பால் தான் முடியும்!

மேகயுகதி மின்னல் வலைவிரித்து மழைத்தூறலை தூவி செல்கிறாள் குடையின்றி நாம் நனைய.

அன்பு என்ற தூண்டிலில் பிடித்து பாசம் என்ற வலைக்குள் சிறை வைத்து.. உன் நினைவை நானும் என் நினைவை நீயும் பரிமாறி கொள்ளும் அதிசயமானது..

பகலில் வாழும் நட்சத்திரங்களாய் பரிணமிக்காமலேயே போய்விடுகிறது பக்குவப்பட்ட காதல்கள்.

1 thought on “தமிழ் காதல் கவிதைகள் | Tamil Love Quotes”

Leave a Comment