Abraham Lincoln quotes in Tamil | ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

Abraham Lincoln quotes in Tamil – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16 ஆம் தேதி ஜனாதிபதியாக இருந்தவர். இவர் 1861 முதல் 1865 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார். 

இத்தகைய சிறப்புமிக்க பதவியை நிர்வாகம் செய்த மாமனிதரான ஆபிரகாம் லிங்கன் கூறிய பொன்மொழிகளை பற்றி இந்த வலைதள பதிவில் காண்போம்.

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள் | Abraham Lincoln quotes in Tamil

நான் படிக்காத புதிய புத்தகத்தை எனக்குக் கொடுப்பவனே என் உண்மையான நண்பன்.

எனக்கு தனிப்பட்ட கொள்கைகள் எதுவும் இல்லை. எனக்கு என்ன சரியென்று தோன்றுகிறதோ அதைத்தான் செய்வேன்.

உலகில் உழைப்பை விட சிறந்த சக்தி வேறொன்றுமில்லை.

நமக்கு வாய்ப்பு கிடைக்கும் வரை நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

எல்லோரையும் நம்புவது ஆபத்து நிறைந்தது. ஆனால் யாரையும் நம்பாமல் இருப்பது இன்னும் பெரிய ஆபத்து.

உழைத்துப் பெற்ற ஒரு ரூபாய்க்கு, எளிதில் கிடைத்த ஐந்து ரூபாயை விட மதிப்பு அதிகம்.

புகழ் தேடுபவன் நிம்மதி இழப்பான்.

இன்றைய வேலையை நாளைக்கு ஒத்திவைத்து நாளைக்கான வேலையை இன்று திட்டமிடாதீர்கள்.

நாம் பணத்தைப் பகிர்ந்தால் அது குறையும். ஆனால் நல்ல எண்ணங்களைப் பகிர்ந்தால் அது பெருகும்.

வெற்றியைப் பெற ஏமாற்றுவதை விட, தோல்வியை ஏற்றுக்கொள்வதே நல்லது.

எந்த வேலையைச் செய்தாலும் அதை முழு மனதோடு செய்ய வேண்டும்.

நான் பொறுமையாக செயல்படுவேன், ஆனால் என் இலக்கை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன்.

மற்றவர்கள் உங்களை மதிக்கவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். உங்கள் செயல்களால் அவர்களை மதிக்க வைக்க முடியும்.

ஒரு மரத்தை வெட்டும் முன், அதற்கான கருவிகளை கூர்மைப்படுத்துவதில் அதிக நேரம் செலவிடுவேன்.

மனிதனுக்கு பாராட்டு என்பது மிகவும் இன்றியமையாதது.

மற்றவர்களுக்கு உதவ விரும்பும் மனம் இருப்பவர்களுக்கு மட்டுமே மற்றவர்களைப் பற்றி பேசும் உரிமை உண்டு.

இன்றைய வேலையை ஒத்திவைப்பது நாளை பெரிய பிரச்சனையை உருவாக்கும்.

அவசரப்படுபவர்கள் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறார்கள். பொறுமையாக காத்திருப்பவர்கள் முழுப் படத்தையும் காண்கிறார்கள்.

பொய் பேசி சிலரை சிறிது காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லா நேரமும் எல்லாரையும் ஏமாற்றி கொண்டே இருக்க முடியாது. உண்மை ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்.

ஊக்கம் மற்றும் தன்னடக்கம் இருந்தால் மனிதன் எதையும் சாதிக்க முடியும்.

என் அம்மாவே எனக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அளித்தவர்.

Leave a Comment